Tamilnadu
தன் உயிரையே காதலிக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்த காதலன்.. விசாரணையில் போலிஸ் ஷாக்!
சென்னை அடுத்த முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். கல்லூரி மாணவரான இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து மெரினா கடற்கரையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது இவருக்குச் சுமதி என்ற பெண் அறிமுகம் கிடைத்துள்ளது.
இதையடுத்து மீண்டும் இருவரும் கடற்கரையில் சந்தித்துள்ளனர். பிறகு தாங்கள் இருவரும் செல்போன் எண்ணை மாற்றிக் கொண்டு பேசி பழகிவந்துள்ளது. இது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.
இப்படிச் சென்று கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காதலர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். மேலும் இவர்கள் ஒருவரை மாறி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறிவந்துள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு காதலி சுமதிக்குப் பிறந்த நாள் வந்துள்ளது. இதையடுத்து அவரை தொடர்பு கொண்ட மோகன் 'உனக்குப் பிறந்தநாள் பரிசு தர ஆசைப்படுகிறேன். என்ன வேண்டும்' என கேட்டுள்ளார். இதையடுத்து மீண்டும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது, நான் தற்கொலை செய்து கொள்ள போகிறன் என கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். பின்னர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் மோகன். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் மோகன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து காதலி சுமதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!