Tamilnadu
“இது தமிழ்நாடு அல்ல.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் லட்சணம்”: அவதூறு பரப்பும் பாஜக கும்பலுக்கு பதிலடி!
தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியை பல்வேறு உலக நாட்டின் பிரபல நாளேடுகள் பாராட்டி செய்தி வெளியிட்டு வருகின்றனர். வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத பல மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாக அத்தகைய ஊடங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.
குறிப்பாக, பெண்களின் கல்வியை முன்னேற்றும் வகையில், அரசுப்பள்ளியில் படித்து, கல்லூரி படிக்கச் செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை, குடும்ப தலைவிக்கு உதவித்தொகை மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் என பல முற்போக்கு திட்டங்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஆட்சிக்கு வந்தநாள் முதல் எந்தவொரு சிறு குறையும் வந்துவிடக்கூடாது, மக்களுக்கு இடையூறு இல்லாமல் அனைத்து பணிகளையும் முடிக்கவேண்டும், அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு கண்காணித்து வருகிறார்.
இந்தசூழலில் சில இடங்களில் சில அதிகாரிகளின் கவனக்குறைவால் நடக்கும் சில பிரச்சனைகளை பா.ஜ.க - அ.தி.மு.க கும்பல் மற்றும் பா.ஜ.க ஆதரவு ஊடகங்கள் சில ஊதி பெரிதாகும் வேலையை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
அப்படி சமீபத்தில் குடிநீர் குழாய் மற்றும் இருசக்கர வாகனத்துடன் சாலை அமைத்த விவகாரத்தை பா.ஜ.க கும்பல்கள் மற்றும் சில ஊடகங்கள் கட்டம் கட்டி பூதாகரமாக்கியது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, சாலை முறையாக அமைக்கப்பட்டது.
இதில் பிரச்சனையை பேச முந்திக்கொண்டு முன்னாள் வந்த ஊடகங்கள் சில, சரிசெய்த சாலையை காண்பிக்கத் தவறியதில் தனது அறத்தை இழந்தது நாம் பார்த்தோம். அதேபோல் போலி செய்தி பரப்புவதற்கும், அரசும் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கும் ஐடி விங்கை நடத்தி வரும் பா.ஜ.க கும்பல், போலி செய்தியை வெளியிட்டு அம்பலமாகி வருவது தொடர்கதையாகி வருகிறது.
அந்தவகையில், பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலத்தில் போடப்பட்ட சாலையை தமிழ்நாடு என பா.ஜ.க கும்பல் பொய் செய்தியை பரப்பியது அம்பலமாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, ஹரியானா மாநிலம் ஃபதேகாபாத் மாவட்டத்தில் ஷேகுபூர் தாதுளி மற்றும் பனவாளி கிராமங்களுக்கு இடையே பொதுப்பணித்துறையால் போடப்பட்ட தார் சாலையில் மரங்களை அகற்றாமல் போடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு என்றும் திராவிட மாடல் அரசா எனவும் அரசுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தையும், பொய் தகவலையும் பரப்பி வருகின்றனர்.
இவர்களின் இத்தகைய போலி செய்திகளுக்கு தி.மு.கவினர் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
திருநர் - திருநங்கையர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தி.மு.க : 3 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!
-
17வது சட்டப்பேரவை தேர்தல்.. தொடர்ந்து 4வது முறை கொளத்தூரில் போட்டி - வேட்புமனு தாக்கல் செய்த முதலமைச்சர்!
-
10 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமன்னார்கோயிலில் களமிறங்கும் திருமா.. வி.சி.க. வேட்பாளர்கள் யார், யார்?
-
தேர்தல் 2026 : களமிறங்கும் 234 பேர்... வெல்லும் வேட்பாளர்கள் மூலமாக இலக்கை வெல்வோம்! - முரசொலி!
-
இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன்: அதிரடியான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்