Tamilnadu
தமிழ்நாட்டில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையம் திறக்க ஒன்றிய அரசு அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழ்நாட்டில் பருவகால மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள் குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,"தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 96%மும், இரண்டாம் தவணை 91% மும் செலுத்தப்பட்டு உள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்த ஒன்றிய அரசு தெரிவித்திருந்த நிலையில் கூடுதலாக காலம் நீட்டிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும்,25 நகர்புற சுகாதார மையமும் துவங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எங்கு துவங்குவது குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும். கடந்த 20 நாட்களில் 13,178 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது,இந்த முகாம்களில் 19 லட்சத்து 79 ஆயிரத்து 351 நபர்கள் பரிசோதனை செய்யபட்டு உள்ளன" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பணத்தைக் கொடுத்து ஓட்டுகளையும் விலைக்கு வாங்க தூய சக்தி விஜய்” : DMK IT WING விமர்சனம்!
-
படுதோல்வியடைந்த தவெக.. அமோக வெற்றி பெற்ற திமுக.. கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவன தேர்தலில் நடந்தது?
-
“பா.ஜ.க.வைப் பற்றி பேசுவதற்கு முதுகெலும்பு உண்டா? விஜய் என்ன மாவீரனா?” - விஜயை பந்தாடிய முரசொலி!
-
“பா.ஜ.க.வின் இன்னொரு கிளை தான் த.வெ.க ; முதல்முறையாக உண்மையை சொன்ன விஜய்” : கனிமொழி எம்.பி பேச்சு!
-
பாதாளச் சாக்கடை திட்டத்தை தனியார் மயமாக்குவது மக்கள் விரோத முடிவு : பெ.சண்முகம் கண்டனம்!