தமிழ்நாடு

இல்லாத கல்லூரியில் தேர்வுமையம்.. UGC-NET தேர்வில் நடந்த குளறுபடி.. உடனடியாக தலையிட்டு சரிசெய்த மதுரை MP !

மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு UGC-NET தேர்வில் இல்லாத கல்லூரியில் தேர்வுமையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இல்லாத கல்லூரியில் தேர்வுமையம்.. UGC-NET தேர்வில் நடந்த குளறுபடி.. உடனடியாக தலையிட்டு சரிசெய்த மதுரை MP !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக NET தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வினை தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்கலைக்கழக மானியக் குழுவிற்காகத் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

இத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை இணையவழியில் நடத்தப்படுகிறது. இதற்காக மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். வரும் 13-ம் தேதி இந்த தேர்வு நடைபெறும் நிலையில், தற்போது ஹால் டிக்கெட் இணையவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மதுரையை சேர்ந்த மாணவிக்கு பெரும் குளறுபடி நேர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இல்லாத கல்லூரியில் தேர்வுமையம்.. UGC-NET தேர்வில் நடந்த குளறுபடி.. உடனடியாக தலையிட்டு சரிசெய்த மதுரை MP !

UGC-NET தேர்வுக்கு விண்ணப்பித்த மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு நேற்று காலை மதுரையில் தேர்வு மையம் என்று ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ளது. ஆனால் மலையில் தேர்வு மையம் கன்னியாகுமரி என்று மாற்றப்பட்டிருந்தது. இது குறித்து அந்த மாணவி இணையத்தில் சோதனை செய்தபோது கன்னியாகுமரியில் ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்த கல்லூரியே இல்லை என்று தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை தொடர்பு கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் தலையீட்டில் பேரில் அந்த மாணவிக்கு மீண்டும் மதுரையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று வேறு சில சம்பவங்களின் அங்கு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், UGC-NET தேர்வுக்கு விண்ணப்பித்த மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு நேற்று காலை தேர்வு எழுதும் நகரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த கடிதத்தில் “மதுரை” என்று இருந்தது. அதில் இருந்த கல்லூரியின் பெயரில் குமரி மாவட்டத்தில் எந்த கல்லூரியும் இல்லை.

பிரச்சனையை மாணவி எனது கவனத்துக்கு கொண்டுவந்தார். உடன் தலையீடு செய்தேன்.இரவுக்குள் தேர்வு மையம் மதுரைக்கு மாற்றப்பட்டு, புதிய நுழைவுச்சீட்டு மாணவிக்கு அனுப்பப்பட்டது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories