Tamilnadu
பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாத மனைவி.. சோகத்தில் விபரீத முடிவெடுத்த கணவன்!
சென்னை அடுத்து பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன். இவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மனைவி இந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து கணவன் ஜெய்கிருஷ்ணனுக்கு பிறந்த நாள் வந்துள்ளது. நண்பர்கள் உறவினர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது மனைவி மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ஜெய்கிருஷ்ணன், மனைவியைத் தொடர்ந்து கொண்டு ஏன் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வில்லை என கேட்டுள்ளார். மேலும் வீட்டிற்கு வரும்படியும் கூறியுள்ளார்.
ஆனால் மனைவி இந்துமதி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலிலிருந்த ஜெய்கிருஷ்ணா நேற்று இரவு வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் ஜெய்கிருஷ்ணா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!