இந்தியா

பட்டியலின சிறுவனை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல்.. பாஜக மாநிலத்தில் தொடரும் தீண்டாமை கொடுமை !

காதணியை திருடியதாக கூறி பட்டியலின சிறுவனை 10 பேர் கொண்ட கும்பல் மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக அடித்துள்ள சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலின சிறுவனை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல்.. பாஜக மாநிலத்தில் தொடரும் தீண்டாமை கொடுமை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களுரு அருகே உள்ள ஒரு பகுதியில் பட்டியலின சமூகத்தைச் யஷ்வந்த் (வயது 15) என்ற சிறுவன். இவர் அதே பகுதியிலுள்ள சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும், அதில் ஒரு சிறுமியின் காதணியைத் திருடியதாக கூறி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவரை பிடித்து கேட்டுள்ளனர்.

அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவிக்கவே உடனே அவர்கள் பொய்யா சொல்கிறாய் என்று கூறி 10 பேர் கொண்ட கும்பல் மின்கம்பத்தில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த செய்தியை கேட்டு பதறியடித்து வந்து மாகாண மீட்க முயன்ற தாயையும், தாக்கியுள்ளனர்.

பட்டியலின சிறுவனை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல்.. பாஜக மாநிலத்தில் தொடரும் தீண்டாமை கொடுமை !

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது தொடர்பான குற்றவாளிகள் 3 பேரை கைது செய்த்தனர். காவல்துறை வருவதை அறிந்தவர்கள், அந்த இடத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவாகினர்.

பட்டியலின சிறுவனை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல்.. பாஜக மாநிலத்தில் தொடரும் தீண்டாமை கொடுமை !

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை அறிந்தும் காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பட்டியலின சிறுவனை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல்.. பாஜக மாநிலத்தில் தொடரும் தீண்டாமை கொடுமை !

காதணியை திருடியதாக கூறி பட்டியலின சிறுவன் மற்றும் அவரது தாயை 10 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories