Tamilnadu
“சிறைப்பிடித்த இலங்கை கடற்படை.. தமிழக மீனவா்களை பத்திரமாக மீட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்” : பின்னணி என்ன?
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேர், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, இலங்கை கடற்படையினர், அங்கு வந்து சுத்தி வளைக்கும் பிடித்து, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, 12 மீனவர்களையும் கைது செய்தனா்.
அதன்பின்பு அவா்களை படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, இலங்கை சிறையில் அடைத்தனா். இதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமர் மற்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதி கோரிக்கை விடுத்தாா்.
இதை அடுத்து ஒன்றிய அரசு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் கூறி, இலங்கை அரசுடன் பேச ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம், தமிழக மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்தது. அதோடு விடுவிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரும், இலங்கையில் உள்ள, இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதை அடுத்து இந்திய தூதராக அதிகாரிகள், மீனவா்கள் 12 பேருக்கும் பாஸ்போர்ட், விசா இல்லாததால், எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கினர். இந்நிலையில், 12 மீனவர்களையும் இன்று அதிகாலை, இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், தமிழக மீனவா்களை வரவேற்று, தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் ஏற்றி, அவர்களுடைய சொந்த ஊர்களில் ஊரான நாகப்பட்டினத்திற்கு அழைத்து சென்றனர்.
Also Read
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!
-
“நிர்மல்குமாருக்கு அறிவு இருக்குமானால் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையை எடுத்துப் பார்க்கலாம்” : முரசொலி!
-
TARGET செய்யும் தவெக அரசு? : “Mental Torture பண்ணாதீங்க..” - கண்ணீருடன் VIDEO வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்