விளையாட்டு

“21 ஆண்டுகளில் 1500 போட்டி.. இது விடைபெற வேண்டிய தருணம்” : டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் உருக்கம் !

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளது டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“21 ஆண்டுகளில் 1500 போட்டி.. இது விடைபெற வேண்டிய தருணம்” : டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் விளையாடி 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் ரோஜர் பெடரர். இவர் 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு உடல்நிலை பிரச்சனைகளை சந்தித்தேன். அறுவை சிகிச்சை காயங்கள் என பல சவால்களை கடந்துள்ளேன்.

அதில் இருந்து மீண்டுவர கடுமையாக உழைத்தபோது, எனது உடலின் திறன் என்ன என்பதை உணர்ந்தேன். தற்போது 41 வயதாகிறது. கடந்த 21 ஆண்டுகளில் 1500 போட்டிகளில் விளையாடியுள்ளேன். எனவே இப்போது நான் விடைபெறவேண்டிய காலம் என கருத்துகிறேன்.” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories