Tamilnadu
ஏரியில் மீன்பிடித்த நண்பர்களுக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த மோட்டூர் அஞ்சலக தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகன் பிரதீஷ் (12). அதேபோல் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவரது மகன் அன்பரசு (15).
நண்பர்களான பிரதீஷ் மற்றும் அன்பரசு இருவரும் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் மீன் பிடிப்பதற்காகச் சென்றனர். அப்போது இருவரும் ஏரியில் கரையோரம் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கால் இடறி இருவரும் ஏரியில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர். இதை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் கிராம மக்கள் உடனே ஏரியில் குதித்து இருவரையும் மீட்டு அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு சிறுவர்களும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி.. மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்” : அன்பில் மகேஸ் கண்டனம்!
-
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : அரசின் நடவடிக்கை என்ன? - பேரவையில் மனோஜ் பாண்டியன் கேள்வி!
-
டெண்டரில் முறைகேடு.. முதலமைச்சர் அலுவலகத்திலேயே நடந்த ஊழல்? - பகீர் கிளப்பும் செய்தியின் பின்னணி என்ன?
-
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மீது 2 வழக்குகள் : உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
-
“3 மாதத்தில் முதலமைச்சருக்கு வந்த பயம்.. சுதந்திர தின உரையா இது?” : வறுத்தெடுத்த முரசொலி தலையங்கம்!