Tamilnadu
”ஏய்..” குடிபோதையில் ஆபாச பேச்சு - அரசு ஊழியரை தாக்கிய துணிக்கடை ஓனருக்கு காப்பு மாட்டிய காவல்துறை !
சென்னை தியாகராய நகர், பாண்டி பஜாரில் உள்ள பல கடைகள் அங்குள்ள பகுதிகளை ஆக்கிரமித்து கடை அமைத்துள்ளனர். அதனால் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், தியாகராய நகரிலுள்ள Smart City பிளாட்பாரத்தில் அமைந்துள்ள தனியார் ஜவுளி கடை ஒன்று, அதன் கடை விளம்பர போர்டை அமைத்திருந்தது. அந்த போர்டு சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு சென்ற அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் அதனை அகற்ற கூறியுள்ளனர்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த கடை உரிமையாளர் அப்துல் கரீம், மாநகராட்சி ஊழியர்களிடம் சண்டையிட்டுள்ளார். இந்த நிகழ்வின்போது, அப்துல் கரீம் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஊழியர்களிடம் சண்டையிட்ட அப்துல், ஊழியர் கண்ணனை கெட்ட வார்த்தையில் வசைபாடியதோடு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இது குறித்து அதிகாரி கண்ணன், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரித்த அதிகாரிகள் கடை உரிமையாளர் அப்துல் கரீமை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், தாக்கி காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!