Tamilnadu
5 வது திருமணம் செய்ய முயன்ற கணவன்.. காவல் நிலையத்தில் 4வது மனைவி பரபரப்பு புகார்!
கடலூர் மாவட்டம் மேலூர் குப்பத்தைச் சேர்ந்தவர் காயத்திரி. இவருக்குக் கடந்த 2020ம் ஆண்டு அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சீனு என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்திற்காகப் பெண் வீட்டார் வரதட்சணையாக 6 சவரன் நகையும், வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கியுள்ளனர். ஆனால் கணவன் சீனு மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார்.
இது பற்றி அறிந்த காயத்திரியின் பெற்றோர் மருமகன் சீனு நடவடிக்கை குறித்து விசாரணை செய்தபோது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. சீனுவுக்கு ஏற்கனவே மூன்று பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது என்றும் நான்காவதாகக் காயத்திரியைத் திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது.
அதேபோல் நில தரகர் என்று கூறி திருமணம் செய்த கொண்ட சீனு தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்துவந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் ஐந்தாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காகவும் சீனு தயாராகி வந்துள்ளார்.
இதையடுத்து மோசடி செய்து திருமணம் செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி காயத்தரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!