Tamilnadu
பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அடுத்தடுத்து உயிரிழக்கும் காட்டு யானைகள்.. கர்ப்பமான யானை உட்பட 3 யானைகள் பலி!
கம்பீரத் தோற்றத்துடன் கூட்டமாக வாழக்கூடிய யானைகள் காடுகளின் பாதுகாவலன் என போற்றப்படுகிறது. நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி நடந்து சென்று ஒரு பகுதியில் இருக்கும் விதையை மற்ற பகுதிக்கு பரப்புவதில் மிகப்பெரிய பங்கு யானைகளுக்கு உள்ளது.
இந்நிலையில், யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், கர்நாடகாவில் மின் வெளியில் சிக்கி கடந்த 5 நாட்களில் 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா மஞ்சள்ளி பகுதியில் இரைத்தேடி வனப்பகுதியில் இருந்து கிராமப்பகுதிக்கு வந்த 25 வயது பெண் யானை ஒன்று, காபி தோட்டத்திற்குள் புகுந்தது.
அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த காட்டு யானையின் மீது மின்சாரம் தாக்கியதில் யானை சம்பவம் இடத்திலேயே இறந்தது. இது குறித்து அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து இறந்த யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர்.
இதில் யானை கர்ப்பமாக இருந்ததும், இரை தேடி வந்த போது உயிரிழந்ததும் தெரியவந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் விராஜ்பேட்டை தாலுகா நெல்லுதிகேரியில் அறுந்துவிழுந்த மின்கம்பியை மிதித்த 2 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம் நடந்திருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு கர்ப்பிணி யானை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!