Tamilnadu
கணவன் இறப்புச் செய்தி கேட்டு உயிரை விட்ட மனைவி.. தம்பதிகள் உடலை ஒன்றாக அடக்கம் செய்த உறவினர்கள்!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழே காலனியைச் சேர்ந்தவர் குணசீலன் (74). இவருடைய மனைவி தமிழரசி ( 68). இந்த தம்பதிக்குத் திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்களது பூர்வீக வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் குணசீலன் உயிரிழந்தார். இவரின் இந்த இறப்புச் செய்தியைக் கேட்ட மனைவி தமிழரசி சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் தம்பதிகள் இருவரது உடலும் ஒன்றாகவே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் கிராமம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!