Tamilnadu
மட்டம் தட்டிய நண்பர்.. ஆன்லைனில் கத்தி ஆர்டர் செய்து கொலை செய்த வாலிபர் - பின்னணி என்ன ?
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ரீகன் (வயது 32). அந்த பகுதியில் ரெளடியாக இருக்கும் இவர், கொலை, கொள்ளை கஞ்சா விற்பனை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருவார். தற்போது காவல் நிலையத்தில் இவர் மீது 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரும் முக்கலம்பாடு பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடியான அஜின் ஜோஸ் என்பவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சுங்கான்கடை பகுதியில் உள்ள மதுக்கடையில் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் இருவரும் மது அருந்தும்போது ரீகன், அஜினை மட்டம் தட்டி பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ரீகன் போதையில் பேசுவதாக எண்ணி சில நாட்கள் கண்டுகொள்ளாமல் இருந்த அஜினுக்கு, நாளடைவில் கோபம் வர தொடங்கியுள்ளது.
இதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்ட அஜின், தன்னை ஒரு சிறந்து ரெளடி என்பதை நிரூபிக்க நினைத்துள்ளார். அதன்படி தனது நண்பரான ரீகனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது மற்றொரு நண்பரான அசோக் என்பவரையும் கூட்டு சேர்த்துள்ளார். மேலும் கொலை செய்வதற்காக ஆன்லைனில் கத்தி ஒன்றையும் ஆர்டர் செய்து வரவழைத்துள்ளார்.
சம்பவத்தன்று வழக்கமாக மது அருந்தும் இடத்திற்கு ரீகனை வரவழைத்த அஜின், அவருக்கு அதிசயமாக மது வாங்கி கொடுத்துள்ளார். இதில் மட்டையான ரீகனை வெளியில் கூட்டி சென்ற அஜின், அங்கு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரீகனின் கழுத்தை கறகறவென அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து அஜின் மற்றும் அசோக் ஆட்டோவில் தப்பியுள்ளனர்.
இதையடுத்து பிணமாக கிடந்த ரீகனை கண்ட ஒருவர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ரீகனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ரீகனின் நண்பரான அஜினயும், அசோக்கையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். நண்பரே சக நண்பரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!