Tamilnadu
”அரசு பேருந்துகள் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை”.. அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திட்டவட்டம்!
பெரம்பலூர் மாவட்டம் மேல உசேன் நகரம் கிராமத்தில் ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பிலான மறுசீரமைப்பு குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சா.சி.சிவசங்கர், "தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 2000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. அதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட்டு அதில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மாணவர்களுக்கு இலவச பயன திட்டம், பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் தொடரும்.
போக்குவரத்து ஊதிய உயர்வு தொடர்பாக நேற்று நடைபெற்ற ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு சில கோரிக்கைகள் மட்டும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும்.
அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் சென்னையில் இயக்கப்பட்ட பெரும்பாலான மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் எந்த வழித்தடங்களில் மினி பேருந்துகள் தேவை என்பதை கண்டறிந்து அவற்றை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் நடத்தினர் பணிகளை நிரப்புவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. அது முடிந்த பின்பு விரைவில் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தொடங்குகிறது ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் - வீடு வீடாகப் பரப்புரை’: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!
-
சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு... : சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெற்ற 10 முக்கிய அம்சங்கள்!
-
“11.9% பொருளாதார வளர்ச்சி” : பேரவையில் அ.தி.மு.க.வுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தரணி முழுமைக்கும் முரசொலிம் இடைக்கால பட்ஜெட்” : கி.வீரமணி வரவேற்பு!
-
இனி டிமாண்டி சாலை, “எம்.எஸ். விஸ்வநாதன் சாலை” என்று அழைக்கப்படும்! - புதிய பெயர் பலகை திறப்பு!