தமிழ்நாடு

“இன்று வாழும் பாரதி, பாரதிதாசன் நீங்கள் தான்” : கவிபேரரசு வைரமுத்துவுக்கு அமைச்சர் துரைமுருகன் புகழாரம் !

கவிதையில் எந்த அளவிற்கு வைரமுத்துவிற்கு ஜாலம் உள்ளதோ அதை விட உரைநடை வீச்சு அவரிடம் உள்ளது என அமைச்சர் துரைமுருகன் பாராட்டியுள்ளார்.

“இன்று வாழும் பாரதி, பாரதிதாசன் நீங்கள் தான்” : கவிபேரரசு வைரமுத்துவுக்கு அமைச்சர் துரைமுருகன் புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கலையரங்கில் கவிபேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் கொண்டாட்டமும், சினிமா துறையில் 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக "வைரமுத்து இலக்கியம் 50" என்ற பெயரில் இலக்கிய பெருவிழா நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி, அமைச்சர் துரைமுருகன், இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா, வெற்றி தமிழர் பேரவை தலைவர் முத்தையா, பாரதி வித்யபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதில் உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன், இந்த மாபெரும் விழாவில் கலந்து கொள்ள வாய்பளித்த விழா குழுவிற்கு நன்றி, தமிழ் இலக்கியத்தில் கோவை என்று ஒன்று உண்டு. வைரமுத்து கலைஞரிடம் பெரும் மதிப்பு பெற்றவர்.

இவ்வுலகில் கற்பனை இல்லாத மனிதனே இருக்க மாட்டான். கவிதையில் எந்த அளவிற்கு வைரமுத்துவிற்கு ஜாலம் உள்ளதோ அதை விட உரைநடை வீச்சு அவரிடம் உள்ளது. தமிழாற்றுப்படை நூல், இந்த உலகமே அழிந்து போய், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு உலகம் தோன்றி அகழ்வாராய்ச்சி செய்தல் இந்த நூல் இருக்கும் தமிழ் மொழி, தமிழரை பற்றி இந்த நூல் எடுத்து கூறும். இன்று வாழும் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் அனைத்தும் நீங்கள் தான்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories