Tamilnadu
பெற்ற மகளை காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்.. விசாரணையில் வெளிவந்த பகீர் சம்பவம்!
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயராம் - முத்துச்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜெயராமுக்கு வெளியூரில் வேலை இருப்பதால், அடிக்கடி வெளியூருக்கு செல்வது வழக்கம். எனவே, தாயும் மகளும் தனியே வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த கென்னடி என்ற சினிமா இயக்குநர், ஒரு படப்பிடிப்புக்காக தேனிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஒரு குழந்தை நட்சத்திரம் தேவைப்பட்டுள்ளது. இதனால் சினிமாவிற்கு ஆட்களை சேர்க்கும் ராக்கம்மா என்பவரை நாடியுள்ளார். அவர் மூலம் கென்னடிக்கு ஒரு பெண் அறிமுகமானார். பின்னர் நாளடைவில் கென்னடிக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
ஒரு நாள் அவர்களின் இந்த காதல் கதை மகளுக்கு தெரிய வர, இதனை வெளியே சொன்னால் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி மிரட்டியுள்ளார் தாய் முத்துச்செல்வி. இதனால் அந்த சிறுமி வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த இயக்குநரின் பார்வை சிறுமி பக்கம் திரும்பியது. தனது காம ஆசையை, சிறுமியின் தாயிடம் சொல்ல.., அவரோ சரி என்று சொல்ல.., தனது சொந்த மகள் என்றும் பாராமல், இயக்குநருக்கு சிறுமியை இரையாக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் மதுரையில் நடந்த கோயில் திருவிழா ஒன்றிற்கு சென்ற தாய், சிறுமியின் பாதுகாப்புக்கு என்று சொல்லி கென்னடியை சிறுமியுடன் இருக்க செய்துள்ளார். அன்று சிறுமியிடம், எல்லை மீறிய கென்னடி, ஒரே நாளில் நான்கு முறை வலுக்கட்டாயமாக சிறுமியை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், அந்த சிறுமிக்கு காபியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து இதனை செய்யுமாறு அறிவுரை கூறி அனுப்பியுள்ளார் தாய்.
இந்த நிலையில், அண்மையில் கோடை விடுமுறைக்கு சென்னையில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு சென்ற சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமியின் சித்தப்பா, சித்தி விசாரிக்கையில் அவர்களிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுத்திருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக சிறுமியை தேனிக்கு அழைத்து வந்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் தாய் முத்துச்செல்வியை அதிரடியாக கைது செய்து செய்தனர். மேலும் பாதிப்பை ஏற்படுத்திய இயக்குநர் தலைமறைவானதால், அவரை போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!