சினிமா

தண்ணீரில் பிறந்த குழந்தை.. நடிகர் நகுல் மனைவி வெளியிட்ட புகைப்படம்!

நடிகர் நகுல்-ஸ்ருதி தம்பதியினருக்கு தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தண்ணீரில் பிறந்த குழந்தை.. நடிகர் நகுல் மனைவி வெளியிட்ட புகைப்படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழில் 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் அறிமுகமாகன நகுல், அதன் பிறகு சில ஆண்டுகள் திரை உலகில் தென்படாமல் இருந்தார். பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முதல் முறையாக வெளியான 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் மாஸாக என்ட்ரி கொடுத்தார். அதன் பின் மாசிலாமணி, கந்தக்கோட்டை, வல்லினம், நாரதன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் அவ்வப்போது பாடல்களும் பாடி வரும் இவர், தற்போது தமிழில் 'வாஸ்கொடா காமா', 'எரியும் கண்ணாடி' ஆகிய இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

தண்ணீரில் பிறந்த குழந்தை.. நடிகர் நகுல் மனைவி வெளியிட்ட புகைப்படம்!

இதனிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு நகுல் ஸ்ருதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், நேற்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக பதிவிட்டுள்ளார்.

அதில் குழந்தை படத்தை பகிர்ந்த அவர், 'Water Birth' வழியாக பிறந்துள்ள குழந்தையை வரவேற்பதாக தெரிவித்திருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நகுல்-ஸ்ருதி தம்பதியினருக்கு ரசிகர்கள், திரை வட்டாரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களது முதல் குழந்தையும் 'Water Birth' மூலம் தான் பிறந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

banner

Related Stories

Related Stories