Tamilnadu
"அரசு பள்ளி மாணவர்களை விஞ்ஞானிகளே பாராட்டுகிறார்கள்".. அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!
சென்னை அண்ணாநகரில் தனியார் அகாடமி நடத்திய கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் , நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் நடிகர் பிக்பாஸ் ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அகாடமியில் பயிற்சி எடுத்து அப்துல் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பெற்றிருக்கும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருது வழங்குகினார். பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி," அமைச்சராக பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகிய காலத்தில் ஒரு பள்ளி மாணவன் என்னை மேடைக்கு பேச அழைத்து இதுதான் முதல் முறை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் சாதனை படைத்த மாணவர்கள் அனைவரையும் பார்கும் பொழுது ரொம்ப பிரமிப்பாக உள்ளது.
மேலும் எந்தத் துறையிலும் ஒற்றுமையாக செயல்பட்டால் வெற்றி பெறலாம் ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறிதாக இருந்தாலும் வளரும் பெண் குழந்தைகளின் திறன் மூளை வளர்ச்சி என்பது அதிகமாகவே இருக்கிறது. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் கேள்வி கேட்கும் திறனில் அதிகமாக ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்று முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை போன்ற அறிஞர்கள் கூறுகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!