Tamilnadu
ரத்த குழாயில் அடைப்பு .. அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஆம்புலன்ஸில் வந்து பொதுத்தேர்வு எழுதிய மாணவி!
தமிழ்நாடு முழுவதும் இன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. நாளை 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு துவங்குகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அரசு பள்ளி மாணவி ஒருவர், மருத்துவமனையில் இருந்து நேரடியாக ஆம்புலன்ஸில் வந்து பொதுத் தேர்வு எழுதியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், குப்பாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி கீதா. இவர்களது மகள் ரிதன்யா. இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று ரிதன்யாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வந்தார். இதனிடையே இன்று பொதுத்தேர்வு நடைபெறும் சூழலில்,மருத்துவமனையில் இருந்த ரிதன்யா தானும் தேர்வு எழுத வேண்டும் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்கள் மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர்.
மாணவி நலமுடன் இருப்பதால் அவரை தேர்வு எழுத மருத்துவர்கள் அனுமதி கொடுத்துள்ளனர். இதையடுத்து மருத்துவர் அறிவுரையின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கணபதி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து மாணவி தேர்வு எழுதினார். இதைப்பார்த்த சக மாணவர்களும், ஆசிரியர்களும் மாணவியின் தன் நம்பிக்கையை பாராட்டி அவரை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தினர்.
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !
-
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : 13 அரசுத்துறைகள்.. குவிந்த பொதுமக்கள்.. தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!