Tamilnadu

ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - 70 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

உடுமலை பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 40000/- ரூபாய் அபராதம் விதித்து திருப்பூர் மாவட்டம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட போடிபட்டி தாமு நகர் பகுதியில் வசித்து வரும் உஷாராணி (35) என்பவரின் இரண்டு மகள்களில், மூத்த மகள் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

அதே பகுதியில் வசித்து வந்த நவரசன் (25) என்பவர் இ.பி-யில் பணிபுரிந்து வந்ததாகவும், கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி, காலை 10.00 மணி அளவில் உஷாராணியின் மூத்த மகள் பள்ளி சிறுமியை தன் மனைவி அழைப்பதாக பொய்யாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று, கத்தியை காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அப்போது செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும், அதனையடுத்து இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என சிறுமியை மிரட்டி வீட்டிற்கு அனுப்பியுள்ளான்.

இந்த சம்பவத்திற்கு பின்பு சிறுமி சரியாக உறக்கமின்றி, சோர்வாக இருந்ததாகவும், சிறுமியை விசாரித்தபோது இந்த சம்பவம் குறித்து தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் உஷாராணி உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ உள்ளிட்ட 5 சட்டங்களில் கீழ் வழக்கு பதிவு செய்து, வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி நவரசன் (25) என்பவர் விரைந்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று, இவ்வழக்கில் மேற்கண்ட குற்றவாளி புரிந்த குற்றச்செயல்கள் நிரூபிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி திருமதி. சுகந்தி குற்றவாளி நவரசனுக்கு சட்ட பிரிவிற்கு 5 பிரிவுகளின் கீழ் 70 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து, சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த உடுமலை அனைத்து மகளிர் காவல் துறையினரே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.

Also Read: “சித்திரை திருவிழா Vs அனுமன் ஜெயந்தி ஊர்வலம் - இந்தியாவே ‘தமிழ்நாடு’ மாதிரி மாறட்டும்” : முரசொலி !