Tamilnadu
விஷம் கொடுத்து மகன் கொலை.. தாயும் தற்கொலை.. சென்னையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!
சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவரது மகன் தவஜ் (14). இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு லதாவின் கணவர் பரத்வாஜ் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாகச் சென்றுள்ளார்.
இதனால் தாய் லதாவும், மகன் தவஜ் ஆகிய இருவர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் லதா இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும், மயங்கி இருந்த சிறுவன் தவஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பிறகு லதா வீட்டிற்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கணவன் விவாகரத்து பெற்று சென்றதில் இருந்த லதா மன அழுத்ததில் இருந்துள்ளார். மேலும் குடும்பச் செலவிற்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.
பிறகு அவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அம்பத்தூரில் தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“கோவிட் காலத்தில் கைதட்ட சொன்ன மோடி.. இப்போதும் மோடி அரசு திருந்தியபாடில்லை..” - திமுக இளைஞரணி விமர்சனம்!
-
RCB அணியை வாங்கியது இவர்களா? மிகப்பெரிய தொகைக்கு கைமாற்றம்.. அணியில் மாற்றம் நிகழுமா! - முழு விவரம்!
-
“175 இடங்களில் உதயசூரியன்; 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
“சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!