இந்தியா

“பைக் விலை 71 ஆயிரம், நம்பருக்கு 15 லட்சம்.. நல்லா இருக்கு பார்ட்னர்ஷிப்” - அசரவைத்த தொழிலதிபரின் செயல்!

CH-01-CJ வரிசையில் 378 ஃபேன்சி நம்பருக்கான ஏலம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி நடைபெற்றிருக்கிறது. அப்போதுதான் 0001 என்ற எண்ணை பிரிஜ் ஏலத்தில் எடுத்திருக்கிறார்.

“பைக் விலை 71 ஆயிரம், நம்பருக்கு 15 லட்சம்.. நல்லா இருக்கு பார்ட்னர்ஷிப்” - அசரவைத்த தொழிலதிபரின் செயல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

71 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ஃபேன்சி நம்பர் வாங்கியிருக்கிறார் சண்டிகரைச் சேர்ந்த விளம்பர தொழிலதிபர்.

ஹரியானா மாநிலத்தின் சண்டிகரை சேர்ந்தவர் பிரிஜ் மோஹன். இவர் அண்மையில் வாங்கிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு ஃபேன்சி நம்பர் வாங்க வேண்டும் என முற்பட்டிருக்கிறார்.

இதற்காக சண்டிகர் RTO-ல் நடந்த ஃபேன்சி நெம்பருக்கான ஏலத்தில் பங்கேற்ற பிரிஜ் மோகன் CH-01-CJ-0001 என்ற பதிவெண்ணை 15 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார். முதலில் 5 லட்சத்துக்கு தொடங்கப்பட்ட 0001 என்ற எண்ணுக்கான ஏலம் 15.44 லட்சத்தில் பிரிஜ் மோகனிடம் வந்தடைந்திருக்கிறது.

“பைக் விலை 71 ஆயிரம், நம்பருக்கு 15 லட்சம்.. நல்லா இருக்கு பார்ட்னர்ஷிப்” - அசரவைத்த தொழிலதிபரின் செயல்!

CH-01-CJ வரிசையில் 378 ஃபேன்சி நம்பருக்கான ஏலம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி நடைபெற்றிருக்கிறது. அப்போதுதான் 0001 என்ற எண்ணை பிரிஜ் ஏலத்தில் எடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியுள்ள பிரிஜ் மோகன், தற்போது தனது ஸ்கூட்டருக்காக வாங்கிய அதே ஃபேன்சி எண்ணை அவரது காருக்காகவும் வாங்கப் போவதாக தெரிவித்துள்ளார். அந்த காரை நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாங்கிப் போவதாகவும், அதற்கான பதிவெண் முன்பதிவையும் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

முன்னதாக ஹரியானா மாநிலத்தின் கூடுதல் வருவாய்க்காக 0001 என்ற எண்ணை ஏலத்தில் விடப்போகிறோம் என அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் அறிவித்திருந்தார்.

banner

Related Stories

Related Stories