Tamilnadu

”இதுதான் சார் ஃபர்ஸ்ட் டைம்...” - வானம் பட பாணியில் போலிஸிடம் சிக்கிய செல்போன் திருடன்; நடந்தது என்ன?

சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் ராஜன் பாபு (19) என்ற கல்லூரி மாணவர் மூன்று நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக தாம்பரம் பேருந்து நிலையத்தில் செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்திருக்கிறர்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் திடிரென ராஜன் பாபுவின் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜன் பாபு தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மேற்கு தாம்பரத்தில் உள்ள செல்போன் சர்வீஸ் செய்யும் கடையில் மர்ம நபர் ஒருவர் விலையுர்ந்த ஐ போனை (I Phone) குறைந்த விலைக்கு விற்க முயன்றுள்ளதாக தாம்பரம் போலிசாஸாக்கு தகவல் வந்திருக்கிறது.

இதனையடுத்து குறிப்பிட்ட அந்த கடைக்கு சென்ற போலிஸார் கையும் களவமாக திருடனை பிடித்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த காமேஷ்வரன் (21) என்பதும் முதன் முதலில் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புகொண்டதை அடுத்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: காதலன் திருமணத்தில் காதலிக்கு அடி உதை: தெலங்கானாவில் முடியை பிடித்து இழுத்து தாக்கிய மணமகனின் உறவினர்!