Tamilnadu
கோடைகாலத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை? தமிழகத்தின் வானிலை எப்படியாக இருக்கும்? - இந்திய வானிலை தகவல்
ஒவ்வொரு மாதத்திற்குமான வானிலை முன்னறிவிப்பை நீண்டகால முன்னறிவிப்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான நீண்டகால முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதியில் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் இயல்பை ஒட்டியும், இயல்பை விட குறைவாகவும் இருப்பதற்கான சாதகமான சூழல் இருப்பதாகவும், வடமேற்கு இந்திய பகுதி, மத்திய இந்திய பகுதி மற்றும் சில வடகிழக்கு பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
மழைக்கான வாய்ப்பு இந்திய முழுவதும் இயல்பை ஒட்டி இருக்க கூடிய சாதகமான சூழல் இருந்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதி மற்றும் இதனை ஒட்டிய மத்திய மேற்கு இந்திய பகுதிகளில் இயல்பை ஒட்டியும், இயல்பை விட அதிகமாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்திய பெருங்கடல் வெப்பநிலை சமன் (neutral) என்ற குறியீட்டில் உள்ளது. இது ஏப்ரல் மாதம் முழுவதும் இதே குறியீட்டில் இருக்க கூடிய சாதகமான சூழல் நிலவுகிறது. இந்திய வானிலை நிலவரம், இந்திய பெருங்கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால் இதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் சராசரியாக 4 செ.மீ பெய்யக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!