இந்தியா

குளுகுளு வெப்பநிலைக்கு மோமோஸ் சமைத்து அசத்திய மம்தா பானர்ஜி.. (வைரல் வீடியோ)

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மோமோஸ் சமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

குளுகுளு வெப்பநிலைக்கு மோமோஸ் சமைத்து அசத்திய மம்தா பானர்ஜி.. (வைரல் வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்கத்தின் வடக்கே உள்ள சுற்றுலா தளமான டார்ஜிலிங்கிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்றிருக்கிறார்.

அப்பயணத்தின் கடைசி நாளான நேற்று டார்ஜிலிங்கில் உள்ள நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி.

அங்கு, குளுருக்கு இதமாக சுடச்சுட மோமோஸ் பண்டம் தயாரிக்கும் கடையை அஞ்சு என்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.

அப்போது அவ்வழியே சென்ற மம்தா பானர்ஜி மோமோஸ் கடையை கண்டதும் அவர்களிடம் உரையாடினார்.

பின்னர், மோமோஸ் பண்டம் செய்வது எப்படி என பெண்களிடம் கேட்டறிந்து அவரே மோமோஸ் செய்துள்ளார். இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

மேலும் முதலமைச்சரே வந்து மோமோ சமைத்தது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே, ஆண்களும் இதுப்போன்ற சிறு சுயத் தொழில்களில் ஈடுபடலாம் எனவும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories