தமிழ்நாடு

பெண்கள் நலனுக்காக மீண்டுமொரு முத்தான அறிவிப்பு: தி.மு.க அரசின் அடுத்த சிறப்பு திட்டம் என்ன தெரியுமா?

அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கீடு செய்ய போக்குவரத்து துறை உத்தரவு.

பெண்கள் நலனுக்காக மீண்டுமொரு முத்தான அறிவிப்பு: தி.மு.க அரசின் அடுத்த சிறப்பு திட்டம் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டு பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் 5 திட்டங்களில் ஒன்று அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற முத்தான திட்டம். அந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான பெண்கள் நாள்தோறும் பயனடைந்து வருகிறார்கள்.

பின்னர், உள்ளாட்சி நிர்வாகத்தில் 50 சதவிகித பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதோடு மாநகராட்சி மேயர் பதவிகளில் பெண்களை அமரவைத்தும் அதனை செயல்படுத்தியுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசு.

இப்படி இருக்கையில், அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கீடு செய்யும் வகையில் முத்தாய்ப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு போக்குவரத்துத்துறை.

அந்த வகையில், போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதிக்கொண்ட பேருந்துகளில் (படுக்கை வசதிக் கொண்ட குளிர்சாதன பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன/குளிர்சாதனமில்லா பேருந்துகள்) பெண்களுக்கென தனியாக படுக்கை எண் 1 LB மற்றும் 4 LB ஒதுக்கீடு செய்து இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

படுக்கை வசதிக்கொண்ட பேருந்துகளுக்கு முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்து தர உத்தரவிடப்பட்டிருக்கிறது. பேருந்து புறப்படும் வரை படுக்கையில் பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாதபட்சத்தில் அதனை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து தர போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories