தமிழ்நாடு

“எது திராவிட மாடல்”.. தொலைக்காட்சி விவாதத்தில் ஆணித்தரமாக எடுத்துரைத்த தமிழன் பிரசன்னா !

திராவிட மாடல் என்பது இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக பாடுபடுவது. ஆரிய மாடல் என்பது சமூகத்தில் அடிமைத்தனத்திற்கு வித்திட்டது என்று தமிழன் பிரசன்னா எடுத்துரைத்தார்.

“எது திராவிட மாடல்”.. தொலைக்காட்சி விவாதத்தில் ஆணித்தரமாக எடுத்துரைத்த தமிழன் பிரசன்னா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திராவிட மாடல் என்பது இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக பாடுபடுவது. ஆரிய மாடல் என்பது சமூகத்தி அடிமைத்தனத்திற்கு வித்திட்டது என்று கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி விவாதத்தில் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதநிகழ்ச்சியில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா பேசியதாவது :-

“ஆரிய மாயை என்றால் என்ன என்று தெரு தெருவாகச் சென்று நாடகம் போட்டு விளக்கிய இயக்கம் எங்கள் இயக்கம்! திராவிட மாடல் என்று நாங்கள் முன்மொழிகிறோமே அந்த திராவிட மாடல் என்ன வென்றால், ஆரியமாயை என்பது படிக்காதே! உனக்கு தகுதி இல்லை என்று சொன்னது. ஆனால் திராவிட மாடல் நீ படி என்று சொன்னது. ஆரியமாயை தாழ்த்தப்பட்டவன் கல்வியைக் கேட்டான் என்றால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்து என்றது.

திராவிட மாடல் சொன்னது உன்னை எவன் சொல்வது? நீ வா பள்ளிக்கு, நான் கூட்டிக் கொண்டு போகிறேன் என்றது. திராவிட மாடல் படி என்றது. ஆரியமாயை குலக்கல்வி திட்டத்திற்குப்போல் என்றது. திராவிட மாடல் பெண்களை படி என்று சொன்னது. ஆரிய மாடல் கணவன் இறந்து போனான் என்றால் மொட்டையடித்து மூலையில் உட்கார வைச்சு வெள்ளைச் சேலை கொடுத்தது. பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றது திராவிட மாடல். சொத்தெல்லாம் கிடையாது பெண் என்பவள் பிள்ளை பெறும் மிஷின் என்று சொன்னது ஆரிய மாயை.

சமூகத்தில் சாதிகள் இல்லை என்று சொன்னது திராவிட மாடல் சாதி ஒருவனுக்கு பிறப்பால் இருக்கிறது என்று சொன்னது ஆரிய மாடல். இதில் ஆரியம் சமூக நீதியை பாதுகாக்கிறதா? திராவிட மாடல் சமூக நீதியை பாதுகாக்கிறதா? பத்திரிகையில் ஒரு அற்புதமான வார்த்தையை போட்டிருந்தார்கள் “சமூக நிலையிலும், பொருளாதார நிலையிலும் என்று இருந்தது. சமூக நீதியையும் இதில் சேர்த்திருக்கவேண்டும்.

எங்கள் தலைவர் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தியாக இருக்கட்டும், தேஜஸ்வியாக இருக்கட்டும். உமர் அப்துல்லாவாக இருக்கட்டும், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களாக இருக்கட்டும் மற்ற மாநிலங்களிலிருந்து வந்த எல்லா தலைவர்களும் ஒரு விஷயத்தை மையப்படுத்தினார்கள். அது மாநில சுயாட்சி! மாநில சுயாட்சியை இன்றைக்கு அல்ல! நெடுங்காலமாக மாநிலங்களுக்குப் பெற்று கொடுத்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்.

முத்தமிழறிஞர் கலைஞர்தான், எல்லா மாநில முதலமைச்சர்களுக்கும் கொடியேற்றுகிற உரிமையைப் பெற்று கொடுத்தார். இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு 27 சதவிகிதம் 50 சதவிகிதம் என்று நீதிமன்றத்தில் போராடி இந்தியாவிற்கே வாங்கி கொடுத்து சமூக நீதியை நிலை நாட்டுகிற கட்டமைப்பு உள்ள கட்சிதான் திராவிட மாடலை மையப்படுத்துகிற தி.மு.க.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories