Tamilnadu
திருமணமான 2 மாதத்தில் காதலனுடன் சென்ற மகள்.. சோகத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு!
திருச்சி மாவட்டம், அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு வைஷ்ணவி என்ற பெண்ணுடன் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென வைஷ்ணவி மாயமாகியுள்ளார்.
இதையடுத்து அவரது கணவர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது, வைஷ்ணவி கார்த்தி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி மாரியப்பனுக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
இதனால் அவர் தனது காதலனுடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து மகள் மாயமானதால் அவரது தந்தை சண்முகம் விஷம் குடித்துள்ளார். இது பற்றி அறிந்த அவரது உறவினர்கள் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Also Read
-
‘கரூர் கொடுந்துயரத்தின் ஒராண்டு நிறைவு.. மனிதத் தன்மையற்ற விஜய்’ : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“ஊரான் வீட்டு நெய்யில் காராபூந்தி சுடுகிறார் விஜய்” : தாராபுரத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!
-
தமிழ்நாட்டில் கூடுதல் ரயில் சேவைகள் : தயாநிதி மாறன் எம்.பி. எழுதிய கடிதத்திற்கு ஒன்றிய அரசு பதில்!
-
“ஜனநாயகத்தை நிலைநாட்ட கழகம் களமிறங்கியுள்ளது” : தாராபுரம் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி MP பேச்சு!
-
ஜெம் வீரமணி வழக்கில் திமுக மீது அவதூறு.. முதல்வர், அமைச்சர்கள் மீது SIT-யில் டி.ஆர்.பாலு எம்.பி புகார்!