Tamilnadu
மாணவிகளிடம் ஈவ் டீஸிங்; பள்ளியில் புகுந்து அட்டூழியம் - நீலாங்கரை போலிஸிடம் சிக்கிய போதை சகோதரர்கள்!
சென்னை பாலவாக்கம் பகுதியில் உள்ள ஆதி திராவிடர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் நேற்று (மார்ச் 16) மாலை 4.30 மணியளவில் வகுப்பு முடிந்து வெளியே வரும் போது, அங்கு குடி போதையில் நின்று கொண்டிருந்த 2 பேர் ஒரு மாணவியை கிண்டல் செய்ததோடு அவதூறாகவும் பேசியிருக்கிறார்கள்.
உடனே அந்த மாணவி தலைமை ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து சக ஆசிரியர்களுடன் தலைமை ஆசிரியை சின்னிராஜகுமாரி மாணவிகளிடம் தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டிருக்கிறார்கள். அப்போது அவர்களையும் அந்த நபர்கள் அவதூறாக பேசி ஆசிரியர்களை தாக்கவும் முயற்சித்திருக்கிறார்கள்.
மேலும் போதையில் பள்ளி வகுப்பறையில் நுழைந்து அங்குள்ள நாற்காலிகளை கீழே தள்ளி சேதப்படுத்தி அட்டூழியம் செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக தலைமை ஆசிரியை சின்னி ராஜகுமார் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிஸார், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்ட பாலவாக்கம் பகுதியை சகோதரர்களான முகமது இப்ராஹிம் (26), அப்துல் ரஹிம் (28) ஆகிய இருவரை கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!