தமிழ்நாடு

“டிப்டாப் உடை.. எல்லா இடத்திலும் கூட்டாளிகள்” - ஊர் ஊராக கொள்ளையடித்த நீராவி முருகன் - பரபரப்பு தகவல்கள்!

போலிஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நீராவி முருகன் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

“டிப்டாப் உடை.. எல்லா இடத்திலும் கூட்டாளிகள்” - ஊர் ஊராக கொள்ளையடித்த நீராவி முருகன் - பரபரப்பு தகவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தூத்துக்குடி மாவட்டம், நீராவிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்துவந்த இவரை போலிஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில் நெல்லையில் தலைமறைவாக இருந்த ரவுடி நீராவி முருகனை போலிஸார் பிடிக்க முயன்றனர். அப்போது அவன் மூன்று போலிஸாரை அரிவாளால் வெட்டியுள்ளான். இதனால் தனிப்படை போலிஸார் என்கவுன்டர் செய்துள்ளனர்.

போலிஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட நீராவி முருகன் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு முதலில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளான். பின்னர் சங்கர் என்ற ரவுடியுடன் நெருக்கம் ஏற்பட்டதை அடுத்து வழிப்பறியுடன் சேர்ந்து கொள்ளை, கொலைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளான்.

1998ஆம் ஆண்டு தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே திருடிய நகையில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் செல்வராஜ் என்பவரை கொலை செய்துள்ளான். இதையடுத்து தாதாக்கள் வட்டத்தில் முருகனுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஊர் ஊராகச் சென்று கொள்ளையடிப்பது, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவது என நீராவி முருகனின் குற்றச்செயல்கள் பெருகிக்கொண்டே சென்றன.

ஒவ்வொரு ஊரிலும் தனது கூட்டாளிகளை நீராவி முருகன் வைத்திருந்தான். அவர்களது உதவியோடு வீடு புகுந்து கொள்ளையடிப்பது, பெண்களை மிரட்டி செயின் பறிப்பது உள்ளிட்ட குற்றச் சம்பவங்களிலும் நீராவி முருகன் ஈடுபட்டு வந்தான்.

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் நடுரோட்டில் ஆசிரியை ஒருவரை கடந்த 2014-ஆம் ஆண்டு பெரிய பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி செயின் பறித்தான் நீராவி முருகன். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அப்போது பரபரப்பை ஏற்படுத்தின.

நீராவி முருகன் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து ஆடம்பரமாக வாழ்வதை வழக்கமாக வந்துள்ளான். டிப்-டாப் உடை, ஸ்டைலிஷ் ஷூ என தொழிலதிபர் போல நீராவி முருகன் வெளியில் உலவியதாகவும் போலிஸார் கூறியுள்ளனர்.

ஒரு இடத்தில் கொள்ளையடித்து விட்டு உடனடியாக வேறு இடத்துக்கு சென்றுவிடுவான். இதனால் அவனைப் பிடிப்பது ஒவ்வொரு முறையும் போலிஸாருக்கு சவாலாகவே இருந்து வந்தது.

மேலும் வழிப்பறி கொள்ளையில் போலிஸாரிடம் சிக்காமல் இருக்கத் தடயங்களே இருக்காத வகையில் திருடுவதில் கைதேர்ந்தவனாகவும் இருந்துள்ளான். இந்நிலையில்தான் போலிஸார் நீராவி முருகனை என்கவுன்ட்டர் செய்து, அவனது கொள்ளை கொலை சாம்ராஜ்ஜியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories