Tamilnadu
எழுத்தறிவு மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு; கல்வித்துறை செயல்பாடு பெருமையாக உள்ளது: UNICEF தலைவர் பாராட்டு!
குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட உள்ள ‘தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் பாதுகாப்புக் கல்விக்கழக’ உருவாக்கத்தில் யுனிசெப் பங்கேற்க இருப்பதாக அதன் இந்தியா பிரிவின் தலைவர் ஹுயூன் ஹி பான் தெரிவித்துள்ளார்.
சென்னை சாஸ்திரி பவனில் யுனிசெப் இந்தியா பிரிவின் தலைவர் ஹுயூன் ஹி பான் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது: -
குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமூக நலத்துறை, நீதித்துறை, காவல்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன. குழந்தைகள் பாதுகாப்புக்கு பள்ளிக்கல்வித் துறையின் ஈடுபாடும் தொடர்ந்து தேவைப்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் தொந்தரவு போன்றவை குறித்த செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமுள்ளது. மதிய உணவுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களால் தமிழ்நாடு எழுத்தறிவு அதிகம் உள்ள மாநிலமாகத் திகழ்கிறது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் திட்டங்கள் யுனிசெப் உதவியுடன் கல்வித்துறையால் செயல்படுத்தப்படுவது பெருமையாக உள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது. பருவநிலை மாற்றம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பருவநிலை மாறுபாடால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இந்தியா 5-ம் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை சந்தித்து யுனிசெப்பின் அடுத்த கட்டத் திட்டங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!