Tamilnadu
சிக்கியது கிரிப்டோகரன்சி முதலீட்டு ஆவணங்கள்... IT ரெய்டில் வலுவாக மாட்டிக்கொண்ட வேலுமணி!
எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கிரிப்டோகரன்சியில் 34 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராகப் பதவி வகித்த எஸ்.பி.வேலுமணி 2016 முதல் 2021 காலகட்டத்தில் ரூ.58.23 கோடி (அதாவது 3,928% வருமானத்தை விட அதிகமாக) சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரொக்கப் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்தினர். கோவையில் 41 இடங்கள் சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள் என எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 58 இடங்களில் சோதனை நடந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று நடத்திய சோதனையில், 11.153 கிலோ தங்க நகைகள், 118 கிலோ வெள்ளி நகைகள், கணக்கில் வராத பணம் ரூ.84,00,000 ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ரூ.34,00,000 அளவுக்கு எஸ்.பி.வேலுமணி பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்குத் தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
Also Read
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!