Tamilnadu
8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. கொலை மிரட்டல் : போக்சோ சட்டத்தில் ‘காப்பு’ மாட்டிய காவல்துறை !
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். 30 வயதான இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மகாலிங்கம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவியை கடந்த 2 மாதமாக பாலியல் நோக்கத்தோடு தனியாக பேசவேண்டும் என கூறி கட்டாயப்படுத்தியுள்ளார்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மகாலிங்கத்தை எச்சரித்துள்ளனர். இருந்தபோதிலும் மகாலிங்கம் அந்த மாணவியை பின்தொடர்ந்து தனியாக பேச வேண்டும் எனவும், இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!