இந்தியா

‘முகக்கவசம் எங்கே..?’ : வாகனத்தில் வந்த நபரை அடித்து இழுத்துச் சென்ற ஆந்திரா போலிஸ் - பகீர் சம்பவம் !

முகக்கவசம் அணியாமல் வந்தவரை போலிஸார் அடித்து காவல்நிலையம் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘முகக்கவசம் எங்கே..?’ : வாகனத்தில் வந்த நபரை அடித்து இழுத்துச் சென்ற ஆந்திரா போலிஸ் - பகீர் சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலிஸார் ஒருவர் அடித்து இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், மர்ரிபாடு கிராமத்தில் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடரமணா வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஒருவர் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளார்.

இதைப்பார்த்து, வெங்கடரமணா அவரது வாகனத்தை நிறுத்தி அந்த நபரை தாக்கியதோடு சட்டையைப் பிடித்து தரதரவென காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றார். இந்தச் சம்பவத்தைப் பார்த்த அங்கிருந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கலாம். அதைவிடுத்து போலிஸாரே இப்படி நடந்து கொண்டது வன்மையாகக் கண்டிக்கக்கூடியது என நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories