இந்தியா

வங்கிக்குச் செல்லும்போது தவறவிட்ட ரூ. 50 ஆயிரம்.. தேடிச்சென்று உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!

சாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரம் பணத்தை உரிமையாளரிடம் ஆட்டோ ஓட்டுநர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிக்குச் செல்லும்போது தவறவிட்ட ரூ. 50 ஆயிரம்.. தேடிச்சென்று உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் காளியப்பன். இவர் தனது மருமகளை ஏனாம் வெங்கடாசலம்பிள்ளை தெருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பும்போது இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தல் 500 ரூபாய் கட்டு ஒன்று இருந்தைப் பார்த்துள்ளார். மேலும் அங்கு வேறு யாரும் இல்லாததால் அதை எடுத்து மருத்துவமனை அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு, கீழே பணம் கிடந்தது. இந்தப்பணத்தை தேடி யாராவது வந்தால் என்னுடைய செல்பேசி எண்ணுக்குத் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த மருத்துவமனையின் காசாளர் ஞானவேல் என்பவர் வங்கியில் பணம் செலுத்தச் சென்றுள்ளார். அவர் நீண்ட நேரம் வராததால் அவரை தொடர்பு கொண்டபோது பணத்தைத் தவற விட்டுவிட்டதாகவும், அதை தேடிவருவதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவரிடம் நீங்கள் தவற விட்டப் பணம் கிடைத்துவிட்டது. ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பத்திரமாக எடுத்துவைத்துள்ளார். அவரை தொடர்பு கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.

பின்னர், காசாளர் அவரை தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரத்தை தவறவிட்டேன் என சரியாக கூறியதை அடுத்து அந்தப் பணத்தை அவரிடம் நேரில் சென்று ஆட்டோ ஓட்டுநர் காளியப்பன் ஒப்படைத்தார். அவரது நேர்யைப் பாராட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories