Tamilnadu
திருமணமான 5வது நாளில் இளம் பெண் எடுத்த முடிவால் பெற்றோர் அதிர்ச்சி.. விசாரணையில் பகீர்!
சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா. இவருக்குக் கடந்த 4ம் தேதி சேலத்தைச் சேர்ந்த ராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து இந்த புதுமண தம்பதி சேலத்தில் திருமண விருந்துகளை முடித்துவிட்டு கொரட்டூர் திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குக் கிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சந்தியாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. ஆனால் அவரை கட்டாயப்படுத்தியதன் காரணமாக இந்த திருமணம் நடந்துள்ளது. இதனால் விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததால் சந்தியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!