Tamilnadu
”மார்ச் 18ல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்.. நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்” : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடருக்கான தேதி அறிவிப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மன்றத்தில் நடைபெறும். அன்றைய தினம் தமிழ்நாடு நிதியமைச்சர் தமிழ்நாட்டின் வரவு செலவு திட்டங்களை தாக்கல் செய்வார்.
கடந்த ஆண்டைப் போன்றே கணினி முறையில் காகிதம் அல்லாத பட்ஜெட்டாக இந்த ஆண்டும் வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார்.
அன்றைய தினம் மாலை அலுவல் ஆய்வு கூட்டம் கூடி எத்தனை நாள் வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதங்களை நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்படும்.
2022-23ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கை வரும் 24ஆம் தேதி நடைபெரும். மேலும் 24ஆம் தேதி அன்று 2021- 22 ஆம் ஆண்டுக்கான இறுதி துணைநிலை அறிக்கை நிதி அமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்படும்.
மானியக் கோரிக்கை தொடர்ந்து நடைபெறுவது தொடர்பாக அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். வரவு செலவு திட்டங்கள் தொடர்பாக நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நிகழ்வு மற்றும் கேள்வி-பதில் நேரங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்படும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பேரவைக் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள்! : நேரில் சென்று தீர்வுகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“ரோடு போடச் சொன்னால், நாடு பிடிப்பார்கள் தி.மு.கழகத்தின் தீரர்கள்!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!