தமிழ்நாடு

“தி.மு.க ஆட்சிக்கு வந்ததால்தான் நீதி கிடைத்தது” : கோகுல்ராஜின் தாய் சித்ரா பேட்டி!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பு குறித்து கோகுல்ராஜின் தாய் சித்ரா பேசியுள்ளார்.

“தி.மு.க ஆட்சிக்கு வந்ததால்தான் நீதி கிடைத்தது” : கோகுல்ராஜின் தாய் சித்ரா பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதற்கு கோகுல்ராஜின் தாய் சித்ரா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கோகுல்ராஜ் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் 2015ல் சாதி ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற குற்றவாளிக்கும் தனித்தனியாக தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இத்தீர்ப்பு குறித்து கோகுல்ராஜின் தாய் சித்ரா கூறுகையில், “குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் ஆயுள் தண்டனையே கொடூரமான தண்டனைதான். இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 பேருக்கும் தண்டனை வழங்க போராடுவோம்.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததால் மட்டுமே கொலையாளிகளுக்கு இந்த தண்டனையே கிடைத்தது. இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் ப.பா.மோகன், மற்றும் வி.சி.க உள்ளிட்ட அரசியல் கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories