Tamilnadu
“திருமணமான 5 மாதத்தில் மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்த கணவன்” : போலிஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை !
தூத்துக்குடி மாவட்டம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவருக்கு மாரிச்செல்வி என்ற பெண்ணுடன் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, கணவனுடன் மாரிச்வெல்வி வசித்துவந்துள்ளார். பின்னர் இவர் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதை அவரது கணவர் பொன்ராஜ் கண்டித்துள்ளார்.
இருப்பினும், கணவனின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து செல்போனில் பேசியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து மனைவியை அவரது தாய்விட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார்.
பின்னர் சிலமாதங்கள் கழித்து, அவரது மாமியார், மருமகனை தொடர்பு கொண்டு மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் படி கூறியுள்ளார். இதற்கு பொன்ராஜ், உங்கள் மகளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என கூறி போனை துண்டித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது நண்பர்களுடன் பொன்ராஜ் மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது அவரையும் பொன்ராஜ் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் மாரிசெல்வி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பொன்ராஜை போலிஸார் தேடிவருகின்றனர்.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!