தமிழ்நாடு

கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி.. சதி திட்டத்தை முறியடித்த போலிஸ் : நடந்து என்ன ?

கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேரை போலிஸார் கைது செய்தனர்.

கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி.. சதி திட்டத்தை முறியடித்த போலிஸ் : நடந்து என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட, கொள்ளிடம் ஆற்றுப் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாகச் சிலர் சுற்றிவருவதாக தா.பழூர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் போலிஸார் தீவிரமாக ஆய்வு நடத்தினர். அப்போது ஐந்து பேர் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

இந்த ஐந்துபேர் கொண்ட கும்பல் கோடாலி கருப்பூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை அடிப்பதற்காக திட்டம்போட்டு, அங்கு செல்வதற்காக காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் தான் அவர்கள் அங்கு வந்த போலிஸாரிடம் சிக்கிக்கொண்டுள்ளனர். இவர்களை விசாரித்தபோது பாண்டித்துறை, வீரமணி, தங்கராஜ், முருகன், அருள்மணி என்பது தெரியவந்தது. இவர்கள் ஐந்து பேரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போலிஸாரின் துரித நடவடிக்கையால் கூட்டுறவு வங்கி கொள்ளையடிக்கும் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories