தமிழ்நாடு

கேட்பாரற்று கிடந்த உடலை தூக்கி சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த பெண் காவலர் - குவியும் பாராட்டு!

இறந்த நபரின் உடலை பெண் காவலர் ஒருவர் தூக்கி அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து உதவி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேட்பாரற்று கிடந்த உடலை தூக்கி சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த பெண் காவலர் - குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் உள்ள, புறநகர் ரயில் நிலைய நுழைவு வாயில் அருகில், நபர் ஒருவர் மயங்கிக் கிடப்பதாகக் காவல் கட்டுப்பாட்டறைக்கு வந்த தகவல் வந்துள்ளது. இதையடுத்து பெரிய மேடு பகுதியில் சோர்ந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் ரோந்து வாகன பொறுப்பு பெண் தலைமை காவலர் லீலா அங்கு சென்றார். பிறகு மருத்துவக்குழுவினரை வரவழைத்து பரிசோதனை செய்தபோது அந்த நபர் இறந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரணை செய்தபோது அந்த நபர் அவரது சித்தியுடன் இரயில் ரயில் நிலையத்துக்கு நடந்து வரும்போது வலிப்பு வந்து மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது.

மேலும், அவரை தூக்குவதற்குக் கூட யாரும் முன் வராத நிலையில், பெண் காவலர் லீலா இறந்த நபரை தூக்கி வாகனத்தில் ஏற்றி அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார். எவ்வளவோ தடைகளைத் தகர்த்தெறிந்து காவல் பணியையும், குடும்பத்தையும் சமாளித்து அயராது பாடுபடும் பெண் காவலர்களுக்கும் இரவு பணியில் இறந்த நபரைத் தூக்கி வாகனத்தில் ஏற்றி அனுப்பிய இந்த வீரமங்கையின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories