Tamilnadu

வாக்காளர்களுக்கு ரூ.10 நோட்டு கொடுத்து டோக்கன் போட்ட அதிமுக.. கொத்தாக பிடித்து போலிஸில் ஒப்படைத்த திமுக !

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 15க்கு உட்பட்ட 195வது வார்டு கண்ணகிநகர் எழில்நகர் பகுதியில், பெண்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய 10 ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுப்பதாக தி.மு.கவினர் கண்ணகிநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலை அறிந்த காவல் உதவி ஆணையர் ரியாசுதீன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது புத்தம் புதிய 10 ரூபாய் நோட்டுகளை வீடு வீடாக வாக்காளர்களுக்கு டோக்கனாக வழங்குவதை போலிஸார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

பின்னர் பணம் பட்டுவாடா செய்ய டோக்கன் கொடுத்த 4 பெண்களை கைது செய்த போலிஸார், அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, 195வது வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டிடும் OMR.ரவிக்கு ஆதரவாக வாக்களிக்க 10 ரூபாய் நோட்டுகளை டோக்கனாக வழங்கியதாகவும் ரவி வெற்றிபெற்றால் கொடுக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுக்கு 10,000 வழங்குதாக கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என போலிஸார் தெரிவித்தனர். மேலும் கைதான 4 பெண்கள் மீது கண்ணகிநகர் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Also Read: தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய திமுக நிர்வாகிகள்.. தேர்தல் பரப்புரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!