Tamilnadu
“வெளியே போறதுக்கு இவ்வளவு பில்டப் வேண்டாம்.. போறதுனா போங்க”: பா.ஜ.க MLA-க்களை கலாய்த்த சபாநாயகர் அப்பாவு!
நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்.13ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது பா.ஜ.க வெளிநடப்பு செய்த நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
அதனைத்தொடர்ந்து குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், காலம் தாழ்த்தில் மீண்டும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியினார்.
ஆளுநரின் இத்தகைய செயல் கடும் கண்டனம் எழுந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு சட்ட மசோதாவை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்படும் என அறிவித்தார்.
அதன்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமைச்சர் மா.சுப்பிரமணியன் மசோதா தாக்கல் செய்தபோது விவாதம் நடைபெற்றது.
விவாதம் தொடங்கும் முன்பே, குறுக்கிட்டு பா.ஜ.க எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பேசனார். அப்போது, “கடந்த முறை மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியதாகக் கூறுவது தவறானது. அப்போது நாங்கள் வெளிநடப்பு செய்தோம்”: என்றார். அதற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்து பேசுகளையில், இந்த முறையும் பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தால், நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும் என்றார்.
மீண்டும் நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டு பேச முயன்றபோது, தலையிட்ட சபாநாயகர் அப்பவு, “வெளியே போறதுக்கு இவ்வளவு பில்டப் வேண்டாம். சட்டப்பேரவையிலிருந்து வெளிய போக நினைத்தால் போய் விடுங்கள்” என்றார். பின்னர் பா.ஜ.கவினர் விவாதம் தொடங்கியவுடனே வெளிநடப்பு செய்தனர்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?