Tamilnadu
நகைக்காக சிறுவனை கொன்று பீரோவில் பூட்டிவைத்த பெண்.. விசாரணையில் வெளிவந்த கொடூரம்!
கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ரிச்சார்ட்டு. இவரது மனைவி சகாய சில்ஜா. இந்த தம்பதிக்கு ஜோகன் ரிஷி என்ற மகன் உள்ளார். கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் தனது குழந்தைகளுடன் சகாய சில்ஜா தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், சிறுவன் ஜோகன் ரிஷி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். இப்போது திடீரென சிறுவன் காணவில்லை. இதையடுத்து சிறுவனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
பின்னர், சிறுவன் காணாதது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து பக்கத்து வீட்டில் சிக்கும் பாத்திமா என்ற பெண்ணை போலிஸார் விசாரணை செய்தனர்.
அப்போது, பொதுமக்கள் பாத்திமா வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் வீட்டிலிருந்த பீரோ உடைந்து கதவு திறந்தபோது சிறுவன் வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலிஸார் விசாரணையில், சிறுவன் அணிந்திருந்த நகைக்காக ஆசைப்பட்டு அவனை வீட்டிற்கு தூக்கிச் சென்று கொலை செய்து பீரோவில் பூட்டியாக பாத்திமா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்க நகைக்கு ஆசைப்பட்டு சிறுவனைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
-
பல்லிளிக்கும் தவெக அரசு.. அமைச்சர் நிர்மல்குமார் நிகழ்வில் மின் தடை.. அமைச்சர், மின்துறை இரட்டை விளக்கம்!
-
“நீங்கள் Failed ஹீரோ, Failed முதலமைச்சர்” : விஜய் பேச்சுக்கு தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பதிலடி!
-
ஆய்வு, ஆராய்ச்சி என்ற பெயரால் படுகுழிக்கு பல்லாக்கு தூக்குவதா? : முரசொலி தலையங்கம் சாடல்!
-
“பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்... தரம் தாழ்ந்து பேசுவதா?”: சிஎம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!