தமிழ்நாடு

வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத நண்பன்.. விரக்தியில் விபரீத முடிவெடுத்த வாலிபர்!

வாங்கிய கடனை நண்பன் திருப்பி கொடுக்காததால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத நண்பன்.. விரக்தியில் விபரீத முடிவெடுத்த வாலிபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி சபியா. இந்த தம்பதிக்குத் தமிழ் இனியா என்ற மகள் உள்ளார். சபியா திருச்சியில் நில அளவையாளராகப் பணியாற்றி வருகிறார்.

இதனால் அவர் திருச்சியில் தங்கி விடுமுறை நாட்களில் மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கணவன் நீலகண்டன் வேலைக்கு எதுவும் செல்லாமல் மகன் தமிழ் இனியாவை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சவியா விடுமுறைக்கா ஊருக்கு வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த பணம் காணாதது குறித்து கணவனிடம் கேட்டுள்ளார்.

இதற்கு, நீலகண்டன் நண்பருக்குக் கடனாகக் கொடுத்துள்ளதாக, அதை திருப்பி கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நீலகண்டன் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் நீலகண்டன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவரது வீட்டில் சோதனை செய்தபோது தற்கொலைக்கு முன்பு நீலகண்டன் எழுதி கடிதம் ஒன்று போலிஸாரிடம் சிக்கியுள்ளது.

அந்த கடிதத்தில், "தனது நண்பருக்கு ரூ. 3 லட்சம் கடன் கொடுத்திருந்தேன். ஆனால் அவர் அந்த பணத்தைத் திருப்பித்தர மறுத்துவிட்டார். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என எழுதியிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். வாங்கிய கடனை நண்பன் திருப்பி கொடுக்காததால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

banner

Related Stories

Related Stories