கைதான தினேஷ்
Tamilnadu
கத்திக்குத்தில் முடிந்த வாக்குவாதம்: பலியான இளைஞர்; சிக்கிய கஞ்சா வியாபாரி - அம்பலமான பகீர் தகவல்கள்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வாரணவாசி பகுதியை சேர்ந்தவர் சந்துரு (26). இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார். இதே பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வாரணவாசியில் உள்ள சலூன் கடையில் அமர்ந்து இருப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஜன.,11) மாலை சந்துருவுக்கும், தினேஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதலில் சந்துருவை தினேஷ் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகின்றது. படுகாயமடைந்த சந்துருவை மீட்ட அப்பகுதி மக்கள் திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சந்துரு சிகிச்சை பலன் இன்றி சந்துரு பரிதாபமாக மருத்துவமனையிலேயே உரிழந்தார்.
இதனையடுத்து உயிரிழந்த சந்துருவின் தந்தை ஜெகதீசன் (43) கொடுத்த புகைரை தொடர்ந்து தலைமறைவாக உள்ள தினேஷ் மீது ஒரகடம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதில், உயிரிழந்த சந்துரு மது போதையில் இருந்ததாகவும் கொலை செய்துவிட்டு தலைமறைவான தினேஷ் கஞ்சா போதையில் இருந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த குற்றவாளியான தினேஷை ஒரகடம் காவல்துறையினர் கைது செய்தனர்.
உயிரிழந்த சந்துரு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதிகள்தான் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை. இந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் வட மாநில இளைஞர்களுக்கு தினேஷ் கஞ்சா விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. வாரணவாசி பகுதியில் உள்ள சலூன் கடையில் வைத்துதான் தினேஷ் கஞ்சா விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார்.
மேலும் கஞ்சா வியாபாரியான தினேஷ் யாரிடம் கஞ்சாவை வாங்கி இந்த பகுதியில் விற்பனை செய்து வருகிறார், எந்த மாநிலத்தில் இருந்து கஞ்சா வரவைக்கப்படுகிறது, கஞ்சா விற்பனை கும்பலின் தலைவன் யார் என பல கோணங்களில் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். சந்துருவை கொலை செய்த விவகாரம் குறித்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Also Read
-
“ஆம்னி பஸ்ஸில் 8 மடங்கு கொள்ளை ; மக்களின் காதுகளில் நாராசமாகதான் ஒலிக்கின்றன” : கே.என்.நேரு அறிக்கை!
-
தவெக நிர்வாகி வீட்டில் 135 KG போதைப்பொருள் பறிமுதல் - CM விஜயிக்கு தொடர்பு ?: எம்.எம்.அப்துல்லா கேள்வி!
-
தவெக நிர்வாகி வீட்டில் ரெய்டு; 135 KG போதைப்பொருள் பறிமுதல்: சிக்கப்போகும் முக்கியப் புள்ளிகள் யார் யார்?
-
“வெங்கட்ராமன் அண்ணாச்சி.. அரிசி விலை என்னாச்சு?” : தி.மு.க கடும் விமர்சனம்!
-
ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கட்டணம் : தவெக அமைச்சர் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லையா? - DMK IT WING!