தமிழ்நாடு

“சாலையோரம் வசிக்கும் சிறுமிக்கு பாடம் எடுத்த போக்குவரத்து காவலர்” : சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னையில் சாலையோரம் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பாடத்திட்டத்தில் வந்த சந்தேகம் ஒன்றை போலிஸாரிடம் கேட்டு கற்றுக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சாலையோரம் வசிக்கும் சிறுமிக்கு பாடம் எடுத்த போக்குவரத்து காவலர்” : சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா ஊரடங்கு காலத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலையோரம் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பாடத்திட்டத்தில் வந்த சந்தேகம் ஒன்றை போலிஸாரிடம் கேட்டு கற்றுக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பிராட்வே பகுதியில் சாலையோரத்தில் வசித்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தீபா. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கணக்கு பாடங்களில் இவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அப்பகுதியில் போக்குவரத்துக் காவலராக பணியாற்றி வரும் மகேந்திரனிடம், தனது சந்தேங்களை தீர்த்து வைக்கும் படி கூறியுள்ளார். காவலர் மகேந்திரனும் சிறுமிக்கு சந்தேங்களை தீர்த்து வைத்திருகிறார். கடந்த ஓர் ஆண்டாகவே சிறுமிக்கு ஏற்படும் அனைத்து சந்தேங்களையும் தீர்த்து வைத்திக்கிறார் என்பது தெரியவந்தது.

தனது பணியில் போது கிடைக்கும் நேரத்தை ஓய்வு எடுக்கப் பயன்படுத்தாமல் சிறுமி முன்னேற்றத்திற்காக ஆசிரியராக மாறிய காவலர் மகேந்திரனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories