Tamilnadu
“குளத்தை ஏலம் எடுப்பதில் முன்பகை.. இளைஞரை சுட்டு படுகொலை செய்த கும்பல்” : விசாரணை தீவிரம் - நடந்தது என்ன?
திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராக்கி (எ) ராக்கேஷ். இவரது தந்தை மாணிக்கம் என்பவர் திண்டுக்கல் அடுத்துள்ள மாலப்பட்டி செட்டிக்குளத்தில் மீன் பிடிப்பதற்கான குத்தகை எடுத்துள்ளார்.
இதனிடையே கடந்த 2ம் தேதி இரவு குளத்தில் காவல் காத்துக் கொண்டு இருக்கும் பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ராக்கேஷை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராகேஷை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் வரும் வழியிலேயே ராக்கேஷ் பரிதாபமாக உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. அவரது உடலில் இருந்து 6 இடங்களில் புல்லட் பாய்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுகிறது. பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலிஸாரின் முதல் கட்ட விசாரணையில், குளத்தை மீன்பிடிக்க ஏலம் எடுப்பதில் முன்பகை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலிஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!