Tamilnadu
“காதலியின் அந்தரங்க படத்தை வெளியிட்ட காதலன்” : போலிஸிடம் சொன்ன திடுக்கிடும் தகவல் - நடந்தது என்ன?
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜ்மல் பைசல். இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அங்கு வேலை செய்யும் பெண்ணும், இவரும் மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து கொரோனா ஊரடங்கு காலத்தில் அந்த பெண்ணின் வீட்டில் அஜ்மல் தங்கியிருந்துள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர், இவர்கள் காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் பெற்றோரிடம் 'உங்கள் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள்' என கூறியுள்ளார். ஆனால் இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அஜ்மல் காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து அந்த பெண்ணும் அவரது பெற்றோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அஜ்மல் பைசலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!